கணவரின் அந்த செயல்.. பூனை மீது பொறாமை கொண்ட மனைவி - என்னடா இது நீதிமன்றத்திற்கு வந்த சோதனை!
தன்னைக் கவனிக்காமல் பூனையைக் கவனித்து வந்த கணவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர்,தன்னுடைய கணவர் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வினோத புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், ‘’தன்னுடைய வீட்டில் கணவர் ஒரு பூனையை வளர்த்து வருகிறார்.
இதனால் தன்னை கண்டுகொள்ளாமல் பூனையுடன் அதிக நேரம் நேரத்தைச் செலவழித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அந்த பூனை அடிக்கடி பெண்ணை பிராண்டி வைத்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
வினோத சம்பவம்
அப்போது இதனைக் கொடுமையாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு குறித்துப் பேசிய நீதிபதி, "வரதட்சணை அல்லது வரதட்சணை கொடுமையின் அடிப்படையில் கணவர் தாக்கினால் மட்டுமே குற்றம்.
வீட்டுப் பூனை தாக்குவது கொடுமையாகாது என கூறினார். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.