கட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்.. குழந்தைகளை வைத்துக்கொண்டு பரிதவிக்கும் கணவர்!
தனது கணவர் குழந்தைகளை விட்டு பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
ஜார்க்கண்ட் மாநித்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக், இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவர்கள் கூலி வேலைக்காக வந்து சென்னை மேடவாக்கத்தில் தங்கி அங்கு கட்டிடம் கட்டும் இடத்தில் பணியாற்றி வந்தனர்.
அதே கட்டிடத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்ற இளைஞனும் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஷகினாவின் கணவருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார்.
போலீசில் புகார்
இந்நிலையில், நேற்று முன்தினம் நஜிபுல் ஷேக் காலை பணிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். மனைவியை காணவில்லை, பின்னர் அந்த சித்தாராவையும் காணவில்லை என்று தெரியவந்தது.
இதனால் தனது மனைவி அந்த நபருடன் ஓடிவிட்டதாக தெரிந்ததும் மனமுடைந்த கணவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சென்று மனைவியை மீட்டு தருமாறு புகாரளித்துள்ளார்.
அங்கு இரண்டு குழந்தைகளும் அங்கு அம்மா ஓடிப்போனது தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தனர். மேலும், அம்மா எப்போது வருவார் அந்த குழந்தைகள் தந்தையிடம் கேட்டதும் அங்கிருந்த காவலர்கள் சோகமடைந்தனர். மேலும், இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.