கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன பெண் - அதிரவைத்த சம்பவம்!
கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் பெண் ஒருவர் சென்றுள்ளார்.
தகாத உறவு
உத்தர பிரதேசம், ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, போலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி அதே பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரருடன் ஓடி விட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பும் கணவன்
இதுகுறித்து ராஜு கூறும்போது, “கடந்த 3-ம் தேதி, எனது மனைவி ராஜேஸ்வரி, கடைக்குச் சென்று துணி, காய்கறி வாங்கி வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் திரும்பவரவில்லை. அவர், இப்பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டுடன் ஓடியிருக்கவேண்டும்.
இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருவதை நானே பார்த்திருக்கிறேன். அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜேஸ்வரியை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.