ஹவுஸ் ஓனருடன் உல்லாசம் - கடைசியில் ஆட்டோ டிரைவர் செய்த அட்டூழியம்!
ஹவுஸ் ஓனரை அந்தரங்க புகைப்படங்களை வைத்து டிரைவர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
தகாத உறவு
பெங்களூரு, பேடரஹள்ளி பகுதியில் 37 வயது பெண் ஒருவர் திருமணமாகி, கணவர், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த வகையில், சுரேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக இருப்பதாக கூறி வீடு கேட்டுள்ளார். இதனையடுத்து சுரேஷுக்கு வீட்டினை வாடகைக்கு கொடுத்துள்ளார். நாளடைவில் இருவருக்கு பழக்கமாகி அது தகாத உறவாக மாறியுள்ளது.
மிரட்டிய டிரைவர்
அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு எழுந்து சண்டை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அந்த பெண்ணின் ஆபாச போட்டோக்கள், வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆபாச புகைப்படங்களை சுரேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவர் குறித்து விசாரிக்கையில், அவர் ரவுடி, பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
உடனே, அந்த பெண் இவர் குறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.