அரசு ஊழியரின் Farewell; கண்முன்னே சரிந்து உயிரைவிட்ட மனைவி - ஷாக் வீடியோ!

Viral Video Rajasthan Death
By Sumathi Dec 26, 2024 08:00 AM GMT
Report

அரசு ஊழியரின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழியனுப்பு விழா

ராஜஸ்தான், மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றியவர் தேவேந்திர சாண்டல். இவரது மனைவி டீனா. இருதய நோயாளியான மனைவியை பார்த்து கொள்வதற்காக

தேவேந்திர சாண்டல் - டீனா

ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நாளில் வழியனுப்பு விழா நடந்துள்ளது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்திய பணம் எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

இந்திய பணம் எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

மனைவி உயிரிழப்பு

அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது டீனா மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனே, சாண்டல் அவரை அமர வைத்து விட்டு, தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து டீனாவை புகைப்படத்திற்கு சிரிக்கும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சிரிக்க முயல்கையில், மேசை மீது சரிந்து விழுந்துள்ளார். உடனே, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.