1 வாரத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த கர்ப்பிணி - இறுதியில் நேர்ந்த கொடூரம்!
கர்ப்பிணி பலியான சம்பவத்தில் 5 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மர்ம பாதிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர், பதால் கொத்ரன்கா பகுதியை சேர்ந்தவர் ரஜிம் அக்தர்(35). இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ரஜோரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உறவினர்கள் அவரை சேர்த்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
4 பேர் பலி
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் அவசர வார்டில் இரவு பணியில் இருந்துள்ளனர்.
மேலும், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் 10 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் மர்ம பாதிப்புகளால் அவருடைய 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.