ஒவ்வொரு முறை உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி - போலீஸில் கதறிய கணவர்!
உறவுக்காக மனைவி பணம் கேட்டதாக கணவர் போலீஸில் புகாரளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவியின் செயல்
பெங்களூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கம்ப்யூட்டர் இன்ஜினியராக உள்ளார். 2022ல் பிந்துஸ்ரீ என்பவரை திருமணம் செய்துள்ளார். அப்போதிருந்தே இருவரும் ஒற்றுமையாக இல்லை என கூறப்படுகிறது.
மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம். தனது அனுமதி இன்றி கணவர் தொடக்கூடாது. மீறி தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவரை, மனைவி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கணவருடன் வாழாமல் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கதறும் கணவன்
உடனே கணவர் போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதில், திருமணம் ஆனதிலிருந்து தாம்பத்திய உறவு நடக்கவில்லை. குழந்தை பெற்றால் தனது அழகு கெட்டுப் போய்விடும்.
குழந்தையை தத்தெடுக்கலாம். என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு முறைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்.
விவாகரத்து வழங்க வேண்டும் என்றால் 45 லட்ச ரூபாய் கேட்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தனது கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் பிந்துஸ்ரீ புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamil

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்களாம்.. புத்தர் கூறுவது என்ன? Manithan
