ஆபாச படம் பார்த்து டார்ச்சர் செய்த கணவர் - வேதனையை கொட்டித்தீர்த்த மனைவி!
டெல்லியில் ஒருவர் ஆபாச படங்களை பார்த்து அதே போல் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் டார்ச்சர்
டெல்லியில் உள்ள ஷஹ்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2000த்தில் திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் ஆபாச படங்களை பார்த்து அவர்களை போல் உடை அணியவும், அதனை பார்க்க வைத்து அதே போல் கேட்டும் துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து இவரது மனைவி ஷஹ்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், " ஆபாசப் படங்களைப் பார்க்கவும், ஆபாச நடிகைகளைப் போல உடை அணியுமாறு துன்புறுத்துகிறார்" என்று கூறியுள்ளார்.
விசாரணை
இதனை தொடர்ந்து, இவரது கனவரின் குடுபத்தினரும் இவரை வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர் என்றும் அவர் புகாரளித்துள்ளார்.
இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவரது கணவர் மீது இந்திய தண்டனையின் பிரிவுகள் 498 ஏ, 406, 377 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில், வரதட்சணை தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் ரோஹித் மீனா கூறியுள்ளார்.