வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்ய டெல்லி விரைந்தது தனிப்படை

Tamil nadu Delhi Tamil Nadu Police
By Thahir Mar 04, 2023 01:33 PM GMT
Report

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உமாராவை கைது செய்ய தனிப்படை டெல்லிக்கு விரைந்ததுள்ளது.

பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு 

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது.

north-indian-issue-special-force-move-on-delhi

இந்தி பேசியதால் தமிழ்நாட்டில் 12 பேர் கழுத்தறுத்து கொலை என தவறான தகவலை பரப்பியதால் வழக்குப்பதிவு செய்யபட்டது. அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி பரப்பியவரை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை போலீஸ்.

டெல்லி விரைந்தது தனிப்படை 

பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை கைது செய்ய டெல்லி விரைந்தது 7 பேர் கொண்ட தனிப்படை.

திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளது. ஐதராபாத்தில் இருவரிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாக சித்தரித்து பிரசாந்த் உமாராவ் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது.

பிரசாந்த் உமாராவ் பரப்பிய வதந்தியால் அடுத்தடுத்து பரப்பப்பட்ட வதந்திக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாரா உள்பட 3 பேரை கைது செய்ய 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.