தாம்பத்ய உறவுக்கு பின் பணம் வசூலித்த மனைவி; அதுவும் ஒவ்வொரு முறையும்.. கணவன் எடுத்த முடிவு!

Relationship Divorce
By Sumathi Aug 08, 2024 06:08 AM GMT
Report

ஒவ்வொரு முறையும் தாம்பத்ய உறவுக்கு பின் மனைவி கணவனிடம் பணம் வசூலித்துள்ளார்.

மனைவியின் செயல்

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஹாவோ. இவருடைய மனைவி ஜூவான். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாதத்திற்கு ஒரு முறை பாலியல் உறவுக்கு அனுமதி என மனைவி நிபந்தனை விதித்துள்ளார்.

தாம்பத்ய உறவுக்கு பின் பணம் வசூலித்த மனைவி; அதுவும் ஒவ்வொரு முறையும்.. கணவன் எடுத்த முடிவு! | Wife Collect Money Every Time After Intercourse

தொடர்ந்து மொத்தமாக கணவரை நிராகரித்துள்ளார். அதற்கு காரணமும் தெரிவிக்கவில்லை. மேலும், தன்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது பாலியல் உறவு கொள்ள விரும்பினாலோ அதற்கு பணம் தர வேண்டும் என கூறி 15 டாலர் (ரூ.1,200) கட்டணம் வசூலித்துள்ளார்.

இதுகுறித்து கணவர் தெரிவிக்கையில், என்னை பற்றி ஜுவான் அவருடைய உறவினர்களிடம் தவறாக பேசியுள்ளார். ரொம்ப குண்டாக இருக்கிறேன் என்றும் ஒரு வேலையை நல்லவிதத்தில் செய்ய போதிய திறன் இல்லாதவர் எனவும் கூறியுள்ளார்.

தாம்பத்ய உறவுக்கு கட்டாயப்படுத்திய முதியவர் - கதறி ஹெல்ப் லைனை நாடிய 87 வயது மனைவி!

தாம்பத்ய உறவுக்கு கட்டாயப்படுத்திய முதியவர் - கதறி ஹெல்ப் லைனை நாடிய 87 வயது மனைவி!

விவாகரத்து

2 ஆண்டுகளாக இருவரும் பேசி கொள்ளவே இல்லை. இருவரும் மெசேஜ் செயலி வழியே தகவல் தொடர்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த தம்பதி திருமண கவுன்சிலிங்கிற்கும் சென்றுள்ளது. ஆனால் அதில் பலனில்லை.

தாம்பத்ய உறவுக்கு பின் பணம் வசூலித்த மனைவி; அதுவும் ஒவ்வொரு முறையும்.. கணவன் எடுத்த முடிவு! | Wife Collect Money Every Time After Intercourse

இதனால் ஹாவோ விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த உறவுமுறை தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்திருக்கிறது எனக் கூறி விவாகரத்து வழங்கியுள்ளது.

இதனையடுத்து இதில் விருப்பமில்லாத மனைவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.