கணவனுக்கு தாய்ப்பால்; இவ்வளவு நன்மைகள் இருக்கு - மனைவி தகவல்!
கணவனுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மனைவி தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் பெய்லி(30). இவரது மனைவி ரேச்சல்(30). இவர் சில தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அது என்னவென்றால், என் கணவருக்கு முதல்முதலாக நான் தாய்ப்பால் கொடுத்தபோது, நாங்கள் கப்பல் பயணத்தில் இருந்தோம். அப்போது எனக்கு மார்ப்பகத்தில் வலி அதிகமாக இருந்தது. தாய்ப்பாலை மகளுக்கு கொடுக்க விரும்பினேன்.
மனைவி பேட்டி
ஆனால் என் குழந்தை குடிக்கவில்லை. இதனால் நான் மிகவும் வேதனையில் இருந்தேன். எனக்கு நோய்த்தொற்று ஏற்படுமோ என்று பயந்தேன். இதை பார்த்த என் கணவர் என்னை அந்த பயத்தில் இருந்து விடுவிப்பதற்காக, முதல் முதலாக பாலை குடிக்க முயற்சித்தார். அவர் என்னிடமிருந்து தாய்ப்பால் குடித்த பின்னர் நான் பதற்றம் அடைந்தேன்.
ஆனால் அதைச் செய்தவுடன், எனக்கு நன்றாக இருந்தது. இது மோசமான விஷயமாக எனக்கு தோன்றவில்லை, உணர்ச்சிபூர்வமான உறவின் பிணைப்பாக நாங்கள் இருவருமே உணர்கிறோம். இருவருக்குமே ஆரோக்கியத்தில் நன்மையாக இருந்தது. இரண்டு வருடங்களாக அவருக்கு சளி பிடிக்கவில்லை. என் கணவரின் சருமம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள்.
இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், நான் இன்று என்ன சாப்பிட்டாலும், அலெக்சாண்டருக்கு அதன் விளைவுகள் வருகிறது. காரமான ஒன்றை சாப்பிட்டால், அவருக்கு வாயுவையும் தருகிறது. இந்த தாய்ப்பால் பழக்கம் தவறாக தோன்றினாலும் இந்த செயலுக்காக வெட்கப்படவில்லை, மோசமானது என்று நினைக்கவில்லை. இந்த பழக்கம் எங்களுக்குள் அன்பை அதிகரிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.