தாய்பால் அதிகரிக்கச் செய்யும் பால்சுறா புட்டு! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 23, 2021 01:27 PM GMT
Report

குழந்தை பிறந்து தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும் பெண்களுக்கு இந்த பால்சுறா புட்டு செய்து கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். 

குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.

எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருத்துவர் அறிவுரையின் பெயரில் மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டும்.

தாய்பால் அதிகரிக்கச் செய்யும் பால்சுறா புட்டு! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

தேவையான பொருட்கள்

பால் சுறா தோல் நீக்கியது - 1 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது - 4 ஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 ஸ்பூன்

மஞ்சள் துாள் - 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் அம்மியில் தட்டியது - 2 கப்

கடலை எண்ணெய் - 6 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை -20 இலைகள்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சுத்தம் செய்த பால் சுறாவை, இட்லி பானையில் வைத்து, பச்சை வாசம் போகும் வரை அவித்து எடுக்க வேண்டும்.

சுறா சூடாக இருக்கும் போதே பொடியாக உதிர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது மற்றும் தட்டிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வதங்கிய கலவையில், உதிர்த்த பால் சுறா, மஞ்சள் துாள், தேவையான உப்பையும் சேர்த்து, 15 நிமிடம் சுருள கிளறி இறக்க வேண்டும். ஆவியில் வேக வைப்பதால், எளிதில் ஜீரணமாகி விடும்.

சுவையான பால் சுறா ரெடி.