இளைஞனுடன் சிக்கிய மனைவி; குழந்தை ஷாக் தகவல் - கணவன் வெறிச்செயல்!
கணவனைத் திட்டமிட்டு மனைவி படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
வேலூர், குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (36). கேட்டரீங் டெக்னாலஜி படித்துள்ள அவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊருக்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது மனைவி மற்றும் இளைய மகளுடன் குருவராஜ பாளையம் பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மனைவி வெறிச்செயல்
அப்போது, சாலையில் கிடந்துள்ள தென்னை மட்டைகளை கடந்து வாகனம் சென்றபோது மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாரத்தை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில், பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (25) என்பவர் தனது தந்தையை வெட்டியதாக பாரத்தின் மகள் கூறியுள்ளார். உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் நந்தினிக்கும்,
சஞ்சய்க்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு, இடையூறாக இருந்த பாரத்தை இருவரும் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நந்தினி மற்றும் சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளனர்.