விஷ ஊசி போட்டு கணவனை கொல்ல முயன்ற 3 திருமணம் செய்த மனைவி
கணவனை விஷ ஊசி போட்டு மனைவி கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
3 திருமணம்
திண்டுக்கல், அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் தேவி. பெற்றோர் இல்லை. முத்துகுமார் என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் இருந்து பிரிந்து, சுப்பிரமணியை 2-ஆவது திருமணம் செய்துள்ளார்.
சுப்பிரமணியிடம் சொத்தை தன் பெயருக்கு கேட்டுள்ளார். ஆனால் அவர் தராத ஆத்திரத்தால், சர்க்கரை வியாதி இருந்த சுப்பிரமணிக்கு, ஊசி வழியாக களைக்கொல்லியை உடலில் செலுத்தி கொல்ல முயற்சித்துள்ளார்.
கொலை முயற்சி
இதில் சுப்பிரமணிக்கு வலிப்பு ஏற்பட்டு நினைவை இழந்துள்ளார். இதனால், பயந்த தேவி, நாமக்கல் மோகனூருக்கு சென்றுள்ளார். அங்கு ஆண் நண்பரான ரவிக்குமாரை சந்தித்து, இத்தனை நாள் தான் திண்டுக்கல் பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்ததாகவும்,
நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கடந்த 27-ஆம் தேதி ரவிக்குமாரை 3-ஆவது திருமணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அளித்த புகாரில் போலீஸார் வழக்குப்பதுவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.