குழந்தை பெத்துக்கணும்.. ஜெயிலில் உள்ள கணவருக்கு பரோல் கேட்கும் மனைவி!

Karnataka
By Sumathi Jun 04, 2024 03:36 AM GMT
Report

குழந்தை பெற்று கொள்வதற்காக, கணவருக்கு பரோல் வழங்க மனைவி கேட்டுள்ளார்.

ஜெயிலில் கணவர்

கர்நாடகா, கோலாரை சேர்ந்தவர் ஆனந்த். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குழந்தை பெத்துக்கணும்.. ஜெயிலில் உள்ள கணவருக்கு பரோல் கேட்கும் மனைவி! | Wife Asks Husband For Parole To Have Baby

இதனை எதிர்த்து ஆனந்த் மேல்முறையீடு செய்த நிலையில், 10 ஆண்டு சிறையாக மாற்றப்பட்டது. இதற்கிடையில், ஆனந்தும், ஒரு இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இதற்கு பரோல் வழங்கும்படி இளம்பெண் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி, ஆனந்தும், இளம்பெண்ணும் திருமணம் செய்தனர். பரோல் காலம் முடிந்ததும், மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, ஆனந்த் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில், குழந்தை பெற்று கொள்வதற்கு ஆனந்தை 90 நாட்கள் பரோலில் அனுப்பும்படி, பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியிடம், ஆனந்தின் மனைவி மனு கொடுத்துள்ளார்.

கணவரை கொலை செய்வது எப்படி? :  கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

கணவரை கொலை செய்வது எப்படி? : கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

 குழந்தை பெற பரோல்

மனு பரிசீலனை செய்யப்படாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'திருமண வாழ்க்கை வாயிலாக குழந்தை பெற்று கொள்வது, அனைவருக்குமான உரிமை. குழந்தையை பெற்று எடுப்பது, என் நடத்தையை சரி செய்ய உதவுகிறது.

karnataka high court

'என் கணவர் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, அமைதியான வாழ்க்கை வாழ, குழந்தை இருப்பது வழிவகை செய்யும். இதனால், என் கணவரை பரோலில் விடுவிக்க, சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசராணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.