தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி - உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்!
குடும்ப தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு மகள்களை தீவைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப தகராறு
மகாராஷ்டிரா, தானே பகுதியில் உள்ள டோம்பிவிலி என்கிற இடத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி பிரீத்தி சாந்தாராம். இத்தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், பிரசாத்திற்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து மனைவிக்கு தெரியவந்த நிலையில், இருவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது கணவர் பிரசாத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில்,
தகாத உறவு
தனது மனைவி மற்றும் மகள்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே, கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை வேளையில், தனது வீட்டிலேயே அவர்களை தீ வைத்து கொளுத்தி குடும்பத்தினரை விபத்தில் உயிரிழந்ததாக செட் செய்து வைத்து, தான் மட்டும் தப்பிக்கொள்ள பிரசாத் திட்டமிட்டுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் உயிருடன் தீவைத்துள்ளார். இதில் பிரசாத்திற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 3 மணி நேரம் கழித்து தான் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மனைவி ப்ரீத்தி, மகள்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான மனைவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.