முன்விரோதம் காரணமாக பெற்ற மகன், மருமகள் மற்றும் பேத்திகளை தீவைத்து எரித்து கொன்ற கொடூர தந்தை

keralacrime thodupuzha housesetonfire 4died fathersonrivalry
By Swetha Subash Mar 19, 2022 07:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

பெற்ற தந்தையே மகனின் குடும்பத்தை தீவைத்து எறித்து கொன்ற கொடூரம் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சீணிக்குழி பகுதியைப் சேர்ந்த தம்பதி முகமது பைசல்- ஷீபா. இவர்களுக்கு 19 வயதில் மெஹ்ரா மற்றும் 14 வயதில் அஸ்னா என்ற மகள்கள் உள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக முகமது பைசலுக்கும் அவரின் தந்தை ஹமீதுகும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஆத்திரம் அடைந்த முதியவர் ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக பெற்ற மகன், மருமகள் மற்றும் பேத்திகளை தீவைத்து எரித்து கொன்ற கொடூர தந்தை | Father Set Son House On Fire With Family Inside

மகன் முகமது பைசல் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தந்தை ஹமீது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தான் வைத்திருந்த பெட்ரோலை வீட்டின் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

தங்களை காப்பாற்ற கோரி அக்கம் பக்கத்தினரை வீட்டுக்குள் இருந்த பைசல் குடும்பத்தினர் கூச்சலிட்டு கூப்பிட்டுள்ளனர். ஆனால் பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் அனைவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

முன்விரோதம் காரணமாக பெற்ற மகன், மருமகள் மற்றும் பேத்திகளை தீவைத்து எரித்து கொன்ற கொடூர தந்தை | Father Set Son House On Fire With Family Inside

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து தீயில் கருகி உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொடுபுழா போலீசார் பைசலின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்பாக அந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரை ஹமீது திறந்து விட்டுள்ளார்.

இதனால் அருகே உள்ளவர்களால் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் முகமது பைசல் தனது குடும்பத்துடன் தீயில் கருகி உயிரிழந்திருக்கிறார்.

தற்போது பைசலின் தந்தை ஹமீதை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்” என கூறினார்.