திருமணமாகி 25 நாள்தான் ஆச்சு.. கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் விஷம் கொடுத்த மனைவி -பகீர்!

Cuddalore Crime Murder
By Vidhya Senthil Mar 01, 2025 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

திருமணமான 25 நாட்களில் கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் மனைவி விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் 

கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாலினி என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 26 ஆம் தேதி பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணமாகி 25 நாள்தான் ஆச்சு.. கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் விஷம் கொடுத்த மனைவி -பகீர்! | Wife Accused Of Poisoning Husband In Cuddalore

ஆனால் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறு ஒருவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.மேலும் பெற்றோரில் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.இதனையடுத்து திருமணத்திற்குப் பிறகு அடிக்கடி இரவில் யாரிடமோ வீடியோ காலில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இளைஞரைக் கொன்று இன்ஸ்டாகிராமில் Reel பதிவிட்ட சம்பவம் -பகீர் பின்னணி!

இளைஞரைக் கொன்று இன்ஸ்டாகிராமில் Reel பதிவிட்ட சம்பவம் -பகீர் பின்னணி!

இதனையடுத்து ஷாலினியை அவர்களின் வீட்டிற்குக் கலையரசன் அனுப்பி வைத்துள்ளார்.மேலும தாலி கட்டியாச்சு! என்ன ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும். ல்லாம் சில நாட்களில் சரியாகி விடும் என்று பெண்ணின் சொந்தக்காரர்கள் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் மனைவி ஷாலினிக்கு தன் மீது விருப்பமில்லை என்பதை உணர்ந்த கலையரசன் தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பியுள்ளார்.அதில் ஆத்திரமடைந்த இளம்பெண் ஷாலினி பிப்ரவரி 20ம் தேதி கூல்ட்ரிங்க்ஸில் கணவனுக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது.

கூல்டிரிங்ஸ்-ல்  விஷம் 

தற்போது கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கலையரசனின் அப்பா சுந்தரமூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  பரபரப்பு  புகார் ஒன்றை அளித்துள்ளார்.

திருமணமாகி 25 நாள்தான் ஆச்சு.. கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் விஷம் கொடுத்த மனைவி -பகீர்! | Wife Accused Of Poisoning Husband In Cuddalore

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஷாலினி வேண்டுமென கூல்டிரிங்சில் விஷம் கலந்துகொடுத்தாரா ? இல்லை வேறு எதாவது காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.