ஒரே ஓவரில் 36 ரன்கள்; ஆஃப்கானை அலறவிட்டு 4 சாதனை - அள்ளி வழங்கிய பவுலர்!
ஒரே ஓவரில் நிக்கோலஸ் பூரன் 36 ரன்களை விளாசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
WI vs AFG
20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அதில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 6 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.
அசத்திய பூரன்
ஆப்கானிஸ்தான் அணி வீரர் அசமத்துல்லா ஓமர்சாய் 4வது ஓவரை வீசினார். ஒரே ஓவரில் பூரன் (6 N4 Wd5 0 L4 4 6 6) 36 ரன்களை விளாசினார்.
most expensive left hander in recent times @nicholas_47 ?
— sai chowdary (@saiholicc) June 18, 2024
"Nicholas Pooran" pic.twitter.com/FJzuxsq2aa
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக, அண்மையில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணைந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 36 ரன்களை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.