உலகக்கோப்பை தோல்வி..நாட்டிற்கு திரும்பாமல் தலைமறைவான 5 பாகிஸ்தான் வீரர்கள்!!
பாகிஸ்தான் அணி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
பாகிஸ்தான் அணி
ஆர்மி ட்ரைனிங் எலலாம் மேற்கொண்டு தயாராகியது பாகிஸ்தான் அணி. எதுக்கு டா என்று கேட்டால், உலகக்கோப்பை'காக என்றார்கள். பெரிய முயற்சி போல, அனைத்து அணிகளையும் அடித்து தும்சம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் சிறிய அணியான அமெரிக்காவிடம் தோற்றது பாகிஸ்தான்.
அடுத்து வழக்கம் போல, இந்தியாவுடன் மீண்டும் ஒரு தோல்வி. இது அவர்களுக்கு புதிதல்ல. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் தான், சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் அயர்லாந்து, கனடா அணிகளை வீழ்த்தியது.
ஆனால், எமனாக குறுக்கே வந்த மழை, பாகிஸ்தான் அணியை வெளியேறியது. இதற்கும் அந்த அணி தற்போது விளையாடுவது 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமான கேரி கிறிஸ்டன் பயிற்சியில்.
தலைமறைவு
எல்லாமே சொதப்ப உலகக்கோப்பையில் இருந்து மூட்டை முடிச்சை கட்டியுள்ளது பாகிஸ்தான். இந்த தோல்வியை பாகிஸ்தான் அணி ரசிகர்கள் கிரகித்து கொள்ளவில்லை. சமூகவலைத்தளங்களில் எதிர்கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான், கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான் போன்ற வீரர்கள் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சிலரை கைகாட்டி அவர்களை அணியில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், தொடரை விட்டு கிளம்பிய பாகிஸ்தான் அணியின் 5 வீரர்கள் நாட்டிற்கு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அவர்கள் குறித்து தகவல் சரியாக இல்லை. நாட்டுக்கு திரும்பினால் பெரும் பிரச்சனை வரும் என்ற காரணத்தால், பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பாமல் வேறு நாட்டிற்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.