கனமழையால் கடும் பாதிப்பு.. மக்களை சந்திக்காமல் விஜய் எங்கே போனார்? பிரபலம் சாடல்!
மக்களை சந்திக்காமல் விஜய் எங்கே போனார்? என பிரபலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்ததோடு கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளை அறிவித்தார். விஜய்யின் அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தமிழக அளவில் தற்பொழுது பெரும் மழை பெய்து வருகிறது, மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஏன் அவர் இன்னும் எந்த விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.
பிரபலம்
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் "கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் எங்கே போனார்? அவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை.
இன்னும் ஒரு அறிக்கையை கூட அவர் வெளியிடாதது ஏன்?. அவர் மீடியாவையும் இதுவரை சந்திக்கவில்லை .மக்கள் சிரமப்படும்போது அவர்களுடன் நிற்காதவர் ஒரு அரசியல் தலைவரா? இதுவே விஜயகாந்தாக இருந்திருந்தால் இந்நேரம் மக்களை சந்திக்க சென்றிருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.