புயல்வேகத்தில் பந்துவீசும் வீரர்..!! கண்டுக்காமல் இருக்கும் BCCI..!! விளாசும் முன்னாள் வீரர்!!
தொடர்ந்து இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றசாட்டுகளை பலரும் வைத்து வருகின்றார்.
BCCI
IPL போட்டிகளின் அறிமுகத்திற்கு பிறகு, பல இளம் அறிமுக வீரர்கள் தொடர்ந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.
அதில், ஒரு சிலர் மட்டுமே தேசிய அணியில் இடம்பெற்று தொடர்ந்து வாய்ப்புகள் பெறுகிறார்கள் என்றும் ஒரு சிலர் ஒதுக்கப்பட்டே வைக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு முறை அணி தேர்வு நடைபெறும் போதும் எழுந்து கொண்டே இருக்கின்றது.
அதில் குறிப்பிடும் படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் பலரும் உதாரணம் காட்டுவார்கள். அப்படி மேலும் ஒரு திறமையான வீரரை BCCI தள்ளிவைத்து வருவதாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
உம்ரன் மாலிக் எங்கே..?
உம்ரான் மாலிக்கை அணித் தேர்வின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பதாக குறிப்பிட்ட அவர், சில காலம் முன்புவரை அவரை அணியில் வைத்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து தொடருக்கு பிறகாக அவரை அணியில் காணவில்லை என்றார்.
ஒரு வீரர் திடீரென அணியில் இருந்து காணாமல் போவது அணிக்கு நல்லதல்ல என்று ஆகாஷ் சோப்ரா கூறினார். இந்தியா ஏ அணியில் கூட உம்ரன் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய அணியில் இருந்தார் என்றும் ஆனால், தற்போது இந்தியா ஏ அணியின் ஒரு பகுதியாக கூட இல்லை என்பது எப்படி நடக்கும்?" என வினவியுள்ளார்.