230 நாளாகியும் இன்னும் ஏன் அமைச்சர் பதவியில் இருக்கிறார் செந்தில் பாலாஜி..? நீதிமன்றம் கேள்வி..!!
செந்தில் பாலாஜி சிறையில் 230 நாட்களுக்கு மேலாக இருக்கும் சூழலிலும் அவர் ஏன் இன்னும் அமைச்சராக தொடருகிறார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து 3 முறை உடல் நிலையை குறிப்பிட்டு ஜாமீன் கோரியும் அவரின் ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஏன்...?
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அமைச்சராக நீடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்ததாகவும், அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.