DOGE-யின் நிதி ரத்து..நாம் ஏன் இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்? அதிபர் ட்ரம்ப் சொன்ன பதில்!
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காகப் பணம் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா
அமெரிக்காவின் 47 வது அதிபராகக் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வரிசையில், அமெரிக்க அரசு திறன் மேம்பாட்டுத் துறை (Department of Government Efficiency-DOGE)தலைவராகப் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்க அரசின் செலவினங்களைக் குறைத்து, செயல்திறனை அதிகரிப்பதே DOGE அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகளை இந்த அமைப்பு ரத்து செய்தும், ஒத்திவைத்தும் வருகிறது.
அதன்படி, தற்பொழுதுசெர்பியா,இந்தியா,வங்கதேசம் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியை டிஓஜிஇ ரத்து செய்துள்ளது. இது குறித்து டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளதாவது: இந்தியாவுக்கு நாம் ஏன் ₹182 கோடி ($21M) தர வேண்டும்? அவர்களிடம் நிறையப் பணம் உள்ளது.
அதிபர் ட்ரம்ப்
உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், அமெரிக்கப் பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது.
இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காகப் பணம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.