தமிழகத்தில் கள்ளுக்கடை..தடைக்கு மறுபரிசீலனையா? உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி
மாநிலத்தில் மது பிரச்சனை பெறும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மது பிரச்சனை
மது பிரச்சனை தமிழகத்தில் பெறும் பிரச்சனை வெடித்துள்ளது. மது பிரச்சனைகளை தாண்டி, கள்ளச்சாராய விவகாரம் தேசிய அளவில் தமிழகத்தின் மீது கவனத்தை திருப்பியது. 60'க்கும் மேல் ஏற்பட்ட மரணங்கள் பலரை உலுக்கியது.
இந்த நிலையில் தான், மக்களவை தேர்தலின் போதே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளச்சாராயம், சாராயங்களை குறைக்க மாநிலத்தில் மீண்டும் கள்ளுக்கடைகளை திறக்கவேண்டும் என பேசினார்.
கேள்வி
அவ்வப்போது அவர் இதனை வலியுறுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நிலையில் தான் இன்று தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதிமன்றம்.
மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேசன் கடைகளில் விற்க அனுமதி கோரிய வழக்கை தள்ளி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல தமிழக டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.