நானும் குடிப்பேன் - ஆனா சாராயம் வேண்டாம் - கள்ளு குடிப்போம் - பிரச்சாரத்தில் அண்ணாமலை அதிரடி
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அண்ணாமலை பிரச்சாரம்
வரும் மக்களவை தேர்தலில் தனி கூட்டணியை அமைத்து பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் என பல கட்சிகளை ஒன்றிணைத்து போட்டியிடுகின்றன.
பல நட்சத்திர வேட்பாளர்களையும் அக்கட்சி களத்தில் நிறுத்தியுள்ளது. கோவையில் அண்ணாமலை என துவங்கி எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், ராதிகா சரத்குமார் போன்றோர்கள் களத்தில் உள்ளனர்.
கள்ளு குடிப்போம்
தீவிரமாக பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் பிரச்சரத்தில் பேசியது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது வருமாறு,
நானும் குடிப்பேன் அதனை ஒப்புக்கொள்கிறேன். நான் உங்களோடு தான் இருக்கிறேன். ஆனால் எதுக்கு சாராயத்தை குடித்து வயிறை புண்ணாக்கிக்கொள்ள வேண்டும். கள்ளு கடைகளை திறப்போம். கள்ளு குடிப்போம் என்று தான் நான் சொல்கிறேன்.