செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இதுதான் காரணம் - அண்ணாமலை விளக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட அமைச்சர் செந்தில் பாலாஜி பல முறை ஜாமீன் கோரியும், தொடர்ந்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது வந்தது.
இதனையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 10ம் தேதி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக கூறியதாவது "செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடிக்கு உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கும் 4 காரணம் மிக முக்கியம்.
விளக்கம்
ஒரு காரணம், கரூருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது அவர்களையே தாக்கியது. இரண்டாவது காரணம் அவரின் மருத்துவ பரிசோதனை, அதை ஜெயிலில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம்.
காரணம் மூன்று, அவரின் தம்பி அசோக் தலைமறைவாக இருப்பது. நான்காவது மிக முக்கிய கரணம், செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருப்பது. நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும், அரசு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி வெளியில் வந்தால் நிச்சயம் சாட்சியை கலைப்பார். அதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்பாவாவது ஒரு குற்றவாளியை அமைச்சராக வைத்திருக்கக் கூடாது" என்று அண்ணாமலை பேசியுள்ளார்.