சிக்கிய செந்தில் பாலாஜி; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - ஆனால் அங்கயும் விழுந்த அடி!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது, நீதிமன்றக் காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டு,
அக்.20 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க முதன்மைஅமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீடு
ஜாமீனில் விடுவித்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்ற நிலைஇல்லை. தற்போது வரை இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிப்பது, அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது,
சோதனைக்கு சென்றவருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றை பார்க்கும்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கின் சாட்சிகள், ஆதாரங்களை அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
இதனையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளனர். ஆனால் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உடனடியாக ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுக்க சஞ்சய் கிஷன் கவுல் மறுத்துவிட்டார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் நவராத்திரி காரணமாக 10 நாட்கள் விடுமுறை வர உள்ள நிலையில், அக்.30ல் மனு விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.