8வது முறை; அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில்,
நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத்துறை பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி,
காவல் நீட்டிப்பு
ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், 8வது முறையாக மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.