ஜாமீன் பெறுவாரா செந்தில் பாலாஜி..? முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன..?
சட்டவிரோத பண பரிவரித்தானை புகாரில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத்துறை பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான், அவர் நேற்று மீண்டும் உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.
கிடைக்குமா ஜாமீன்??
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் ஜாமீன் பெற உச்ச நீதிமன்றம் செல்லவே அறிவுறுத்தும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.