அதுக்கு பரிகாரமாக ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன் - தனக்கு தானே தண்டனை கொடுத்த எலான் மஸ்க்
ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் எக்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதில் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வரும் நிறுவனமாகும்.
மத்திய சீனாவின் கோங்கி மலை பகுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் ஒன்று சோதனையின் போது தானாகவே விண்ணில் பாய்ந்தது. சில நொடிகளில் கீழே விழுந்த ராக்கெட் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.
ஸ்பேஸ் எக்ஸ்
இந்நிலையில், "கட்டமைப்பு கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்துச் சிதறியதாகவும், கோங்கி மலைப் பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை" என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
To make up for this heinous crime, I will refrain from having omelette for a week pic.twitter.com/FecxG8Rjmg
— Elon Musk (@elonmusk) July 10, 2024
இந்தநிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியை ஊடகவியலாளர் மைக் பெஸ்கா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, யாருக்கும் உயிர்சேதமில்லை என்று கூறியதற்கு பதிலடியாக அங்கிருந்த 9 பறவை கூடுகள் அழிந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இது வைரல் ஆன நிலையில் எலான் மஸ்க் இதற்கு பதிலளித்துள்ளார். 'இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.