இனி மளிகை கடைகளில் ஏடிஎம் - ஆனால் பணம் வராது; துப்பாக்கி குண்டு தான் வரும்

United States of America
By Karthikraja Jul 09, 2024 11:30 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

மளிகை கடைகளில் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் துப்பாக்கி தோட்டா பெரும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

துப்பாக்கி குண்டு

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. காரணம் அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அங்கு சர்வசாதாரணமாக துப்பாக்கி பெற முடியும். பெரும்பலான மக்களிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் உள்ளது. 

us bullet vending machine

இந்த துப்பாக்கி உரிமை குறித்தான விவாதம் அமெரிக்க அரசியலிலும் முக்கிய பிரச்சனையாக எதிரொலித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய அமேரிக்காவில் பெரும்பாலான மக்களிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மிகுந்த சிரமம் உள்ளது. 

பேங்க் அக்கவுண்டில் இருந்து 25 பைசா எடுக்க சென்றவர் கைது - காரணம் தெரியுமா?

பேங்க் அக்கவுண்டில் இருந்து 25 பைசா எடுக்க சென்றவர் கைது - காரணம் தெரியுமா?

3 மாநிலங்கள் 

எனவே வெண்டிங் இயந்திரங்கள் மூலம் உடனுக்குடன் துப்பாக்கிக் தோட்டக்களை பெற்றுக்கொள்ளும் வசதி மளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து, தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 

us bullet vending machine

மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ள இந்த இயந்திரத்தில் பேசியல் ரெகக்னிஷன் மூலமும் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம். இது 24 மணி நேரமும் செயல்படும். முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களில் உள்ள மளிகை கடைகளில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது.