பேங்க் அக்கவுண்டில் இருந்து 25 பைசா எடுக்க சென்றவர் கைது - காரணம் தெரியுமா?

United States of America
By Karthikraja Jul 08, 2024 08:30 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 வங்கி கணக்கில் 25 பைசா எடுக்க சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 பைசா

உலகில் கோடி கோடியாக கொள்ளையடித்த பலரும் வெளியில் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 25 பைசா எடுக்க சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

chase bank america

அமெரிக்காவின் மத்திய புளோரிடா மாகாணத்தில் உள்ள சேஸ் வங்கியில் மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர் தனது வங்கி கணக்கில் இருந்து 1 சென்ட் (இந்திய மதிப்பில் 0.024 பைசா) எடுக்க வேண்டும் என்று படிவத்தை நிரப்பி கவுண்டரில் கொடுத்துள்ளார். 

பிடிக்காத உயரதிகாரிகள், வேலை - ஆன்லைனில் விற்பனை செய்யும் சீனர்கள்?

பிடிக்காத உயரதிகாரிகள், வேலை - ஆன்லைனில் விற்பனை செய்யும் சீனர்கள்?

கைது

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகை எல்லாம் தர முடியாது என மறுத்துள்ளார்.இதை கேட்டு கோபமடைந்த மைக்கேல் பிளெம்மிங், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று வாங்கி அதிகாரியை மிரட்டியுள்ளார்.

பேங்க் அக்கவுண்டில் இருந்து 25 பைசா எடுக்க சென்றவர் கைது - காரணம் தெரியுமா? | Man Arrest For Withdraw 25 Paisa Bank Account

உடனே வங்கி அதிகாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல் துறையினர் வங்கி அதிகாரியை மிரட்டியதாக அங்கிருந்த மைக்கேல் பிளெம்மிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.