பிடிக்காத உயரதிகாரிகள், வேலை - ஆன்லைனில் விற்பனை செய்யும் சீனர்கள்?
அலுவலக உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை, பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸ் இணையத்தளத்தில் விற்பனைக்கு அறிவித்துள்ளனர்.
சீனா
தற்போதய சமூக சூழ்நிலையில் அனைவரும் வாழ்க்கையை எதிர்கொள்ள ஏதோ ஒரு வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் பிடித்த வேலை அமைவதில்லை . ஒரு சிலருக்கு பணி புரியும் நிறுவனம் பிடிப்பதில்லை. சிலருக்கு உயரதிகாரிகள் நடத்தும் விதமோ, உடன் பணிபுரிபவர்களோ பிடிப்பதில்லை. இதனால் கோபமும், மனசோர்வும் அடைகின்றனர்.
இந்த பிரச்சனையை சீனர்கள் வேறு விதமாக கையாள்கிறார்கள். தங்களுக்கு பிடிக்காத வேலை, உயரதிகாரிகள் உடன் பணிபுரிபவர்களை ஈ-காமர்ஸ் இணையத்தளத்தில் விற்பனை செய்து தங்களின் மன சோர்வை போக்கிக்கொள்கின்றனர்.
விற்பனை
அலிபாபா என்ற இணையதளத்தில் ரூ 4 லட்சம் முதல் ரூ 9 லட்சத்துக்கு விற்பனை செய்கின்றனர். இதன்படி ஒருவர் தன்னுடைய மாதம் 33 ஆயிரம் வருமானம் தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்றுத்தருகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
வார இறுதிநாட்களில் விடுமுறை இல்லாத தன் வேலையை ரூ113 க்கு விற்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது ஒருவர் இதற்காக பணம் செலுத்தினர். ஆனால் நான் அவருக்கு பணத்தை திருப்பி அளித்து விட்டு அந்த பதிவை நீக்கி விட்டேன். இது உண்மையில் யாரையும் விற்பது, வாங்குவது இல்லை. இது எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழி. இதை சிறிய பழிவாங்கும் செயலாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.