தற்கொலை செய்து கொண்ட உலகத்தின் முதல் ரோபோ - பணிச்சுமை காரணமா?

South Korea
By Karthikraja Jul 03, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா

தென் கொரியாவின் குமி நகர சபையில் ஊழியராக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ரோபோ பணியாற்றி வந்தது. அதன் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இந்த ரோபோவுக்கு சொந்த அடையாள அட்டையும் உண்டு. 

robot gumi city hall south korea

தினமும் ஆவணங்களை டெலிவரி செய்வது, உள்ளூர் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரோபோக்களைப் போல் இல்லாமல், லிஃப்ட் மூலம் பல தளங்களுக்கும் சென்று பணியாற்ற கூடியது.

விசாரணை

இந்த பொதுமக்களுக்கு உதவும் ரோபோ அந்த கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு மத்தியில் மொத்தமாக சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமி சிட்டி ஹாலில் இரண்டு மீட்டர் படிகட்டில் இருந்து கீழே விழுந்து அந்த ரோபாட் தற்கொலை செய்துகொண்டதாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அது ஒரே இடத்தையே சுற்றி வந்தது, ஏதோ பிரச்னை என்பது போல் இருந்தது, உடனே கீழே விழுந்துவிட்டது என அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,என்கின்றனர். இருப்பினும், ரோபோட்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அது தயாரிக்கப்பட்ட நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு பின் தான் முடிவு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.