ஆடி மாதம் புதுமண தம்பதிகளை என்றாலே பிரிக்கிறார்கள்? அப்படி என்ன தான் காரணம்
ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதிகளை பிரிப்பதை நம் ஊர்களில் வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.
ஆடி மாசம்
ஆடி மாசம் என்பது தமிழர் பரம்பரியத்தில் ஒன்றிணைத்து போன ஒரு விஷயமாகவே உள்ளது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளில் துவங்கி, பொங்கல் வைத்து வழிபடுவார்கள் மக்கள்.
அப்படியிருக்கும் ஆடி மாதத்தில் தவறாமல் நடைபெறும் மற்றுமொரு நிகழ்வு என்றால் அது புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது. இது வழக்கமாகவே நடைபெற்று வருகிறது.
ஆனால், நம்மில் பலருக்கும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்பது தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது. ஏன் இந்த வழக்கம் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஏன்..?
பூமி 360 டிகிரி வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் நமக்கு ஒவ்வொரு மாதமாக அமைகிறது. இவை உத்தராயணம், தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. தட்சிணாயணத்தின் துவக்க மாதமாக ஆடி மாதம் வருகிறது. அப்போதே வெயிலின் கோரப்பிடியில் இருந்து பூமி விடுபடுகிறது.
அதன் காரணமாகவே ஆடி மாதம் சிறப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது.
அதே போல, ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால், குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும் படி ஆகிறது. சித்திரை என்பது வெயில் உக்கிரமாக இருக்கும் சமயம் என்பதால், அது பிறக்கும் குழந்தைக்கும் கடினம். பெற்றெடுக்கும் தாய்க்கும் பெரும் சோதனையாக அமைந்து விடும் என்பதிலேயே ஆடி மாதத்தில் புது மணத் தம்பதியைப் பிரித்து வைக்கிறார்கள்.