இரவில் தலைக்கு குளிக்கிறீங்களா? இனி இதை மறந்தும் செய்யாதீங்க!
இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?
ஈரமான கூந்தல்
இரவில் தலைக்கு குளிப்பதால் ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்ல நேரிடும். இது முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றுகிறது.
முடியின் தண்டைப் பாதுகாக்கும் நமது வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து பாதுகாப்புத் தடையை வலுவிழக்கச் செய்து, சேதங்களை அதிகரிக்கிறது.
என்னென்ன பாதிப்பு?
இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சியை ஊக்குவிக்கும். காலையில் முடி உதிர்வதை ஊக்குவிக்கும். மேலும் சிக்கு மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற உடனடி நோய்க்கு வழிவகுக்கும். இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.
எனவே, இந்த ஆபத்துகளைத் தவிர்க்க உங்கள் தலைமுடியை உலர்த்திய பின் படுக்கைக்குச் செல்வது சிறந்தது.