உங்க சொந்த செல்லப்பிராணிகளுக்கு இப்படித்தான் பெயர் வைப்பீர்களா? நீதிமன்றம் கேள்வி
சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீதா, அக்பர் சிங்கங்கள்:
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த வாரம் 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
அதில் ஆண் சிங்கத்திற்கு ”அக்பர்” என்றும் பெண் சிங்கத்திற்கு ”சீதா”என்றும் பெயர் சூட்டப்பட்ட இரு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு:
அதனைத் தொடர்ந்து, சீதா மற்றும் அக்பர் என பெயர் வைக்கப்பட்டுள்ள சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என அதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விலங்குகளுக்கு இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனிமேல் வைக்கக்கூடாது. இந்த இரண்டு சிங்கங்களுக்கும் பெயரை மாற்றியமைக்க வேண்டும் என மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.