சீதா' வுடன் அக்பர் இருக்க கூடாது - விஷ்வ இந்து பரிஷத் தொடர்ந்து வினோத வழக்கு
மேற்குவங்கத்தில் இரு சிங்கங்கள் ஒன்றாக இருக்க கூடாது என விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கங்கள்
திரிபுராவின் செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தின் சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
அவற்றில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியான நிலையில், இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது.
அம்மனுவில் “ராமாயண கதாபாத்திரனமான சீதா இந்து மத வழக்கங்களில் தெய்வமாக வழிபாடுசெய்யப்படுபவர். அதே போல அக்பர் என்பவர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். இரு சிங்கங்களும் ஒன்றாக இருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல மனுவில், சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரபட்டுள்ளது. மனு மீதான விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.