ஊர்வலத்தால் நடந்த மத கலவரம்.. மீண்டும் யாத்திரை துவங்கிய இந்து மக்கள்!

India World
By Vinothini Aug 14, 2023 05:06 AM GMT
Report

ஹரியானாவில் இந்துக்கள் மேற்கொண்ட ஊர்வலத்தால் பல வன்முறைகள் வெடித்து கலவரமானது, தற்பொழுது மீண்டும் துவங்கியதாக ந்தகவல் வெளியாகியுள்ளது.

கலவரம்

ஹரியாணாவின் நூ மாவட்டத் தில், விஷ்வ இந்து பரிஷத் சார்பாக ஜலாபிஷேக யாத்திரை நடந்தது. இது முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி அருகே தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் வெடித்து, தாக்குதல் நடந்திருக்கிறது.

hindus-again-started-yatra-after-violence

யாத்திரையில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தநு முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் 6 பேர்உயிரிழந்தனர். தற்போது அங்கு வன்முறை கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் துவக்கம்

இந்நிலையில், ‘சர்வ இந்து சமாஜ்’ என்ற பெயரில் மகாபஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரையை அரசு அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் வரும் 28-ம் தேதி முதல் தொடர முடிவு செய்யப்பட்டது.

hindus-again-started-yatra-after-violence

கடந்த மாதம் நடந்த வன்முறையால் பல உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டு கலவரக்காடானது. தற்பொழுது மீண்டும் துவங்கியுள்ள இந்த யாத்ரிரை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.