திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

Kamal Haasan Tamil nadu DMK Makkal Needhi Maiam
By Karthick Mar 11, 2024 02:02 AM GMT
Report

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 

திமுக-மநீம 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்! | Why Mnm Alliance With Dmk Kamal Haasan Explains

அந்த வகையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக, தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

கூட்டணி ஏன்? 

இந்நிலையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்! | Why Mnm Alliance With Dmk Kamal Haasan Explains

அதில் "தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று தெரிவித்துள்ளார்.