இதனால் தான் இபிஎஸ்'ஸை சந்தித்து பேசினேன் - த.மா.கா இளைஞரணி தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியை உறுதிசெய்துள்ள நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துள்ளார்.
உறுதியான கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவதாக ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார்.
அதிமுகவின் கூட்டணிக்கு தான் த.மா.கா செல்லும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிமுக காம்பவுண்ட்டில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறப்பட்டது.
பிரச்சனைகளுக்கு...
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019- ஆம் ஆண்டு முதல் த.மா.கா. - அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம்.
பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.