பாஜகவுடன் கூட்டணி அமைக்க இது தான் காரணம் - ஜி.கே.வாசன்
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே.வாசன், பாஜகவுடன் கூட்டணியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அண்மையில் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பாஜவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடியை பிரதமர் ஏற்று கொண்டு கூட்டணியில் இணைவதாக அவர் தெரிவித்தார்.
காரணம் இது தான்..?
பொருளாதாரத்தில் நாட்டை பாஜக முன்னேற்றும் என நம்பிக்கை தெரிவித்த ஜி.கே.வாசன், படித்தவர்கள், இளைஞர்கள் பாஜகவை தான் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், வரும் 27-ஆம் தேதி தமிழகம் வரும் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதிப்டுத்திய அவர், சாதாரண மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க திமுக தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், வளமான பாரதம் அமைய கட்சிகள் பாஜகவின் கூட்டணிக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்து, பாஜக கூட்டணி வெல்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் உழைக்கும் என தெரிவித்தார்.
மேலும், கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.