காதலனை கொலை செய்த பெண்.. தூக்குத் தண்டனைக்கு பிறகு நீதிபதி பேனா நிப்பை உடைத்தது ஏன்?
கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பேனா நிப்பை உடைத்தது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரளா
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. இவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிரீஷ்மாவுக்கு, அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.'
இதற்கு கிரீஷ்மா இடையூறாக இருப்பதாகக் கருதி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து ஷரோன் ராஜைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அவருக்குக் குளிர்பானத்தில் வலி நிவாரண மாத்திரை, தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால் அது பலனளிக்கவில்லை தொடர்ந்து ஷரோன் ராஜைத் தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களைக் கலந்து ஆயுர்வேத பானமாகக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன் துடிதுடித்து உயிரிழந்தார்.
நீதிபதி
மேலும் ஷரோன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்ட கிரீஷ்மா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கிரீஷ்மாவை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது தீர்ப்பளித்த பிறகு பேனா முனையிலுள்ள நிப்பை உடைத்தார்.
இந்த நடைமுறை ஆங்கிலேயர் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபரின் உயிரைக் குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும், நீதிபதிகளின் வேதனையை வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நடைமுறையை இந்திய நிதிபதிகள் பின்பற்றிவருகின்றனர்.