குளிக்கும் போது வீடியோ கால் பண்ணு..பள்ளி மாணவியிடம் ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் தகவல்!
10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி
வேலூர் கொணவட்டம் பகுதியில் வசித்து வருபவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்.
அந்த மாணவியிடம் மாலை வீட்டுக்குச் சென்ற பிறகு வீடியோ காலில் பேசச் சொல்லி ஆசிரியர் முகமது சானேகா வலியுறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.அப்போது தேர்வில் மதிப்பெண் குறைத்து வழங்குவேன் என மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்து மாணவி ஆசிரியருக்கு வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது குளிக்கும் போதும் வீடியோ காலில் பேச வேண்டும் என்று ஆசிரியர் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்தபோது தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து,பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த தொந்தரவு குறித்துப் பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் முகமது சானேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.