மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய தம்பதி; தோழிகளையும் விடல.. பகீர் பின்னணி!
மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் தள்ளி, வீடியோவாக எடுத்து சம்பாதித்துள்ளனர்.
பாலியல் தொழில்
சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் போலீஸாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில், விசாரணை நடத்தியதில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
பெற்றோர் கொடூரம்
உடனே, அந்த நபரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். மேலும் விசாரணையில், தனது மனைவியின் உதவியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ததும்,
இதேபோல், அப்பகுதியில் பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த தம்பதியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார், ஆபாச வீடியோக்களை இவர்களிடம் பெற்று பயன்படுத்தியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது