சர்வாதிகாரி இபிஎஸ்.. திமுக-வில் இணைந்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு

O Paneer Selvam
By Fathima Feb 27, 2026 05:29 AM GMT
Report

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் திமுக-வில் இணைந்தது ஏன் என கூறியுள்ளார் ஓபிஎஸ்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக-வின் தாய் கழத்தில் இணைந்துள்ளேன்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!


சிறப்பான ஆட்சியை, அடித்தட்டு மக்களுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான அரசை தளபதி ஸ்டாலின் அளித்துக்கொண்டு இருக்கிறார்.

அண்ணாவைப் போல முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களையும் தாய் உள்ளத்தோடு சமமாக நடத்துகிறார்.

அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இது நானே சுயமாக எடுத்த முடிவு. கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான முடிவுகளால் யோசித்து எடுத்த முடிவு. திமுக-வில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக்கொண்ட முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்?

திமுக துணை பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்?


மேலும் ஈபிஎஸ் அராஜகத்துடன் சர்வாதிகாரி போல நடந்துகொண்டு வருவதாகவும், தென் மாவட்டத்தில் யாரும் உருவாகிவிடக்கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியை அழிவுப்பாதைக்கு இபிஎஸ் இட்டு செல்கிறார், அதிமுக இனி வெற்றி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரி இபிஎஸ்.. திமுக-வில் இணைந்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு | Why Joined In Dmk Ops Interview