திமுக துணை பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்?

O Paneer Selvam
By Fathima Feb 27, 2026 05:18 AM GMT
Report

திமுக வில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்து கொண்டார்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!


அவருடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக துணை பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்? | Ops Appointed As Deputy General Secretary