ராஜ நாகத்ததை 'கிங் கோப்ரா ' என அழைக்க காரணம் இது தான்!
ராஜ நாக பாம்புகள் இனம் சராசரியாக 18-20 ஆண்டுகள் வாழ்கின்றனர்.
ராஜ நாகம்
நாக பாம்புகள் பொதுவாக 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். ஆனால் ராஜ நாகம் 15 அடி முதல் 18.5 அடி நீளம் வரை இருக்கும்.
குறிப்பாக இந்த வகையான பாம்புகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை ,கிழக்கு தொடர்ச்சி மலை , அசாம் ,உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டாலும் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவை பெரும்பாலும் நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியும் ,அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும். (கிங் கோப்ரா) ராஜ நாகம் இனம் சராசரியாக 18-20 ஆண்டுகள் வாழ்கின்றனர். ராஜ நாகப்பாம்பின் கண்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால் 90 மீட்டர் தூரத்தில் இருந்தும் இரையை பார்க்க முடியும்.
கிங் கோப்ரா
மேலும் ராஜ நாகம் (கிங் கோப்ரா) என்ற பெயர் வருவதற்கு அதன் உணவுதான் காரணம் என்று ஊர்வன நிபுணர்கள் கூறுகிறார்கள். இது சிறிய மற்றும் பெரிய நாகப்பாம்புகளை விழுங்குவதால், அதற்கு ‘ராஜ நாகம்’ என்று பெயரிடப்பட்டது.
இந்த வகையான ராஜ நாகப்பாம்பு முதிர்ச்சி அடையும் போது மஞ்சள், பச்சை, பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அவற்றின் உடலில் பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை நிற கோடுகள் இருக்கும்.
அதிலும் இந்திய நாகப்பாம்புகள் கருப்பு, பழுப்பு, மஞ்சள், சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.