தானாக கர்ப்பம் அடைந்த முதலை - ஆச்சரியத்தில் உயிரியல் பூங்கா பணியாளர்கள்
United States of America
By Thahir
அமெரிக்காவில் முதலை ஒன்று தானாக கர்ப்பம் அடைந்துள்ள தகவல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தானாக கர்ப்பம் அடைந்த முதலை
16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கன்னிப் பிறப்பு மூலம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.
இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.